ஒரு நொடிக் கவிதைகள் - 2 அவர்வயின் விதும்பல் - காதல் பூக்கும் மாதம் - 180
Feb 20

தவமாய்த் தவமிருந்து
தான் பெற்ற மகளும்
தாயாகிவிட்டப் பரவசம்
அம்மாவின் முகத்தில்…

அள்ளிக் கொஞ்சிட
அழகாய் ஒரு பேத்தி
அம்சமாகப் பிறந்ததில்
அப்பாவுக்கும் ஆனந்தம்…

மடியில் கிடத்தி
பாசத்தோடு சீர் செய்ய
மருமகள் கிடைத்துவிட்ட
மனநிறைவில் அண்ணன்…

தன்னை சித்தியென்றழைக்க
புதியதோர் ஜீவன்
பூத்துவிட்ட களிப்பில்,
பூரித்திருக்கும் தங்கை…

இப்படி…
எனக்குப் பிறந்தக் குழந்தையின் சிரிப்பில்
மகிழ்ச்சியைக் கொண்டாடும் இவர்களுக்கு,
கேட்டுவிட வேண்டாம்…

இவர்களுக்காகவே
எனக்குள் நான் கொன்று போட்ட
என் காதலின் அழுகை!

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

33 Responses to “இவர்களுக்காகவே”

  1. கார்த்திக் பிரபு Says:

    யோவ் என்னய்யா இது ..என்னடா காதலலையே கானோம்னு பார்த்தேன் கடசில புகுத்திட்டீரே

  2. திருக்குமரன் Says:

    கவிதை அருமை.தொடர்ந்து எழுதுங்கள்.பாராட்டுக்கள்.

  3. அருட்பெருங்கோ Says:

    / யோவ் என்னய்யா இது ..என்னடா காதலலையே கானோம்னு பார்த்தேன் கடசில புகுத்திட்டீரே /

    புகுத்துவதா காதல்? புகுவதுதானே காதல்?

    பின்னூட்டத்துலையும் காதல நான் புகுத்தல அதுவா தான் புகுந்துச்சு!!!

  4. முத்துலெட்சுமி Says:

    தினமலரில் உங்கள பத்தி வந்துருக்காமே வாழ்த்துக்கள்.

  5. அருட்பெருங்கோ Says:

    வாங்க திருக்குமரன்,

    / கவிதை அருமை.தொடர்ந்து எழுதுங்கள்.பாராட்டுக்கள்./

    ஊக்கத்திற்கும், பாராட்டுக்கும் நன்றிகள் திரு!!

  6. அருட்பெருங்கோ Says:

    வாங்க முத்துலெட்சுமி,

    / தினமலரில் உங்கள பத்தி வந்துருக்காமே வாழ்த்துக்கள்./

    ஆமாங்க…மகிழ்ச்சியான செய்தி!!!

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றீ!!!

  7. சென்ஷி Says:

    மின் நூலாக்கி எப்போ தரப்போறீங்க

    சென்ஷி

  8. அருட்பெருங்கோ Says:

    வாங்க சென்ஷி,

    / மின் நூலாக்கி எப்போ தரப்போறீங்க
    /

    கூடிய விரைவில்…

    சிறந்த கவிதை(என்று நான் கருதும் கவிதை)களை பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்…

    கம்மியா தான் சேர்ந்திருக்கு அதான்!!! ;-)

  9. Mathuraiampathi Says:

    இப்போத்தான் பார்த்தேன் செந்தழலாரின் பதிவினை…..வாழ்த்துக்கள்

  10. கோபிநாத் Says:

    அருமை அருள்…

    எப்படி எல்லாம் யோசிக்கீறிங்க…

    வாழ்த்துக்கள்..தினமலர் விஷயத்துக்கும் வாழ்த்துக்கள்…

  11. சத்தியா Says:

    ம்ம்… கவிதைக்கும் வாழ்த்துக்கள் அருள்!

    தினமலரில் வெளிவந்த உங்கள் செய்திக்கும் வாழ்த்துக்கள்!

    உங்கள் மின் நூலைக் காணும் ஆவலுடன் நானும் காத்திருக்கின்றேன்.

  12. பிரேம்குமார் Says:

    மதியம் கூட ப்ளாக பாத்துட்டு என்னடா புதுசா எதுவும் காணோமேன்னு யோசித்துக்கொண்டிருந்தேன். இப்போ பாத்தா புதுசா ஒரு பதிவு மற்றும் தித்திக்கும் ஒரு சேதி வேறு. வாழ்த்துக்கள் நண்பா. நிறைய சந்தோசம் சேதி கேட்டு

  13. அருட்பெருங்கோ Says:

    / ம்ம்… கவிதைக்கும் வாழ்த்துக்கள் அருள்!

    தினமலரில் வெளிவந்த உங்கள் செய்திக்கும் வாழ்த்துக்கள்!/

    வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் சத்தியா!!!

    /உங்கள் மின் நூலைக் காணும் ஆவலுடன் நானும் காத்திருக்கின்றேன்./

    விரைவில் தருகிறேன்… இடையில் கொஞ்சம் இடமாற்ற வேலைகள் இருக்கின்றன!!!

  14. அருட்பெருங்கோ Says:

    வாங்க பிரேம்,

    /மதியம் கூட ப்ளாக பாத்துட்டு என்னடா புதுசா எதுவும் காணோமேன்னு யோசித்துக்கொண்டிருந்தேன். இப்போ பாத்தா புதுசா ஒரு பதிவு மற்றும் தித்திக்கும் ஒரு சேதி வேறு. வாழ்த்துக்கள் நண்பா. நிறைய சந்தோசம் சேதி கேட்டு/

    இது பழைய கவிதைதான்… நேற்று எழுத நேரமில்லாததால் பழையதை வைத்து ஒப்பேற்றி விட்டேன்!!!

    தினமலர் சேதி் மகிழ்ச்சியளித்தது…நண்பர்களின் வாழ்த்து அதனை இரட்டிப்பாக்குகிறது!!!

  15. யாழினி அத்தன் Says:

    உங்களின் இந்தக் கவிதை பிரமாதம்.

    ஒரிரு கற்பனைத் துளிகள் இன்னும் சுவை
    கூட்டலாம்.

    வாழ்த்துக்கள்.

    யாழினி அத்தன்

  16. அருட்பெருங்கோ Says:

    வாங்க மதுரையம்பதி,

    /இப்போத்தான் பார்த்தேன் செந்தழலாரின் பதிவினை…..வாழ்த்துக்கள் /

    வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நண்பரே…

  17. அருட்பெருங்கோ Says:

    /அருமை அருள்…

    எப்படி எல்லாம் யோசிக்கீறிங்க…/

    ம்ம்ம்… யோசிக்காமலே எழுதும் அளவுக்கு நான் பிறவிக் கவிஞன் இல்லையே!!

    /வாழ்த்துக்கள்..தினமலர் விஷயத்துக்கும் வாழ்த்துக்கள்… /

    வாழ்த்துக்களுக்கு நன்றி கோபி!!!

  18. sharel Says:

    உங்கள் கவிதைகள் அனைதும் என் மனதைக் கொள்ளைக் கொண்டன………………
    மிகவும் அருமை…..

    இப்படிக்கு,
    புரியாத புதிர்

  19. Gunasekar Kolandasamy Says:

    hi friend this is guna from iit delhi.. your words are reaching not only in south but also in north..
    now your blog has started occuping my permanent opened site list…
    dinamalar kandaen valthukal

    gunasekar.k(unga pakkuthu uru thnaga..erode)
    now @iitd

  20. அருட்பெருங்கோ Says:

    / உங்களின் இந்தக் கவிதை பிரமாதம்.

    ஒரிரு கற்பனைத் துளிகள் இன்னும் சுவை
    கூட்டலாம்.

    வாழ்த்துக்கள்.

    யாழினி அத்தன்/

    வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றிகள் இரமேஷ்!!!

  21. அருட்பெருங்கோ Says:

    / உங்கள் கவிதைகள் அனைதும் என் மனதைக் கொள்ளைக் கொண்டன………………
    மிகவும் அருமை…..

    இப்படிக்கு,
    புரியாத புதிர்/

    பாராட்டுக்கு நன்றி புரியாத(?) புதிர்!!!

  22. அருட்பெருங்கோ Says:

    வாங்க குணா,

    / hi friend this is guna from iit delhi.. your words are reaching not only in south but also in north..
    now your blog has started occuping my permanent opened site list…
    dinamalar kandaen valthukal/

    மிகவும் மகிழ்ச்சி!!! வாழ்த்துக்களுக்கும் நன்றீ நண்பா!!!

    /gunasekar.k(unga pakkuthu uru thnaga..erode)
    now @iitd/

    ஈரோட்டுக் காரரா? அப்ப பக்கம் தான் :-)

  23. Anonymous Says:

    Hi Arul,

    First time i am seeing ur blog..Your lines really touching and superb.

    Surprised to see that dinamalar published about you.

    But i couldn’t find anything in dinamalar.com edition.

    vaazhthukkal
    shankar

  24. APPU Says:

    Halo sir,

    jus saw ur website in dinamlar n came here..

    wishes!!
    Karthik
    Chennai

  25. அருட்பெருங்கோ Says:

    / Hi Arul,

    First time i am seeing ur blog..Your lines really touching and superb.

    Surprised to see that dinamalar published about you.

    But i couldn’t find anything in dinamalar.com edition.

    vaazhthukkal
    shankar/

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சங்கர்!!!

    தினமலர் ஈ பேப்பரில் நேற்று முன்தினம் வந்திருக்குங்க…

  26. அருட்பெருங்கோ Says:

    / Halo sir,

    jus saw ur website in dinamlar n came here..

    wishes!!
    Karthik
    Chennai/

    வாங்க கார்த்திக்,

    தினமலருக்கும், வாசித்து வாழ்த்திய உங்களுக்கும் நன்றிகள்!!!

  27. ஜி Says:

    காதலில்லாத அருட்பெருங்கோ கவிதையா? அப்டீனு ஒரு நிமிசம் பயந்தே போயிட்டேன்…

    அப்புறம்தான் தெரிஞ்சுது….

    தினமலர் மட்டுமில்லை… கவிதை தொகுப்பு நூலாகவும் வர வாழ்த்துக்கள்.. :)))

  28. G.Ragavan Says:

    காதல் அமுதென்று
    யார் சொன்னது?
    மூழ்கிக் குடிக்கும் வண்டு
    இன்னும் வெளியில் வரவில்லை
    உயிரோடுதான் இருக்கிறதா?
    அடடே! அமுதம் தீர்ந்து விட்டது
    குவளையில் நிரம்பியிருப்பது கண்ணீர்

  29. Anonymous Says:

    Kavithai arumai…thodarnthu ithu pondra kavithaigalai ungalidam yethir paarkiren..

    Sankar Ganesh S
    New Delhi.

  30. அருட்பெருங்கோ Says:

    வாங்க ஜி.ரா,

    /காதல் அமுதென்று
    யார் சொன்னது?
    மூழ்கிக் குடிக்கும் வண்டு
    இன்னும் வெளியில் வரவில்லை
    உயிரோடுதான் இருக்கிறதா?
    அடடே! அமுதம் தீர்ந்து விட்டது
    குவளையில் நிரம்பியிருப்பது கண்ணீர் /

    கவிதையே சோகமாத்தான இருக்கு… நீங்க வேற ஏன் கண்ணீர ஊத்துறீங்க? ;-)

  31. Deekshanya Says:

    “அழியாத அன்புடன்” என்று ஏன் எழுதுகிறீர்கள் என்று விளங்கிற்று எனக்கு இக்கவிதை படித்து. வாழ்க்கை தரும் பாடம்தான் காதல்! என்றும் அன்புடன், இன்புற்று இருக்க என் வாழ்த்துக்கள்.

  32. அருட்பெருங்கோ Says:

    /”அழியாத அன்புடன்” என்று ஏன் எழுதுகிறீர்கள் என்று விளங்கிற்று எனக்கு இக்கவிதை படித்து. வாழ்க்கை தரும் பாடம்தான் காதல்! என்றும் அன்புடன், இன்புற்று இருக்க என் வாழ்த்துக்கள்./

    நன்றிகள் தீக்ஷன்யா!!!

  33. Ramesh Says:

    வாழ்த்துக்கள்

Leave a Reply