Feb 02

தமிழகத்தில் உயிரிழந்த அந்த இளைஞருக்காக நமது துயரத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வோம். ஆனால் அந்த உயிரிழப்பை வைத்து சுயநல அரசியல் செய்ய‍ வேண்டாம். இவ்வாறு அரசியலாக்குவது காலம் காலமாக நாம் கட்டிக் காத்து வரும் பண்பாட்டிற்கே விரோதமானது.

தமிழராய்ப் பிறந்த எல்லோருக்குமே இது மன உளைச்ச‍லையும், இப்ப‍டி மரணத்தின் மீது அரசியல் செய்யும் சுயநலவாதிகள் மீது தீரா வெறுப்பையுமே தோற்றுவிக்கும் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது.

எனவே,
தீயாக உள்ள‍ம் கொண்ட அன்னைகளும்,
சமூக நிதி காத்த‍ அம்மாக்களும்,
தண்டம் தகரபாலுக்களும்,
ஞானசூனியசேகரன்களும்,
உல‌கத் தமிழ் னத்த‍லைவர்களும்,

இந்தியாவின் இணையற்ற‍ இளைஞர் கைப்புள்ள‍ “ராஜிவின்” மரணத்தை வைத்து இன்ன‍மும் இன அழிப்பு அரசியல் செய்ய‍ வேண்டாம்.

தமிழக காங்கிரஸ் தான் மண்ணையள்ளி தன் தலையில் போட்டுக்கொள்கிறதென்றால், அவர்கள் அள்ளிய மண்ணில் பாதியைப் பிடுங்கி தி.மு.க வும் தன் தலையில் போட்டுக்கொள்கிறது!

தமிழக அரசின் அண்மைய அறிவிப்புகள், எச்ச‍ரிக்கைகளைப் பார்த்து ஆற்றாமையில் புலம்ப மட்டும் தான் முடிகிறது :(

2009 இல் தமிழினச் சுத்திகரிப்பு குறிகாட்டி

2009 Tamil Ethnic Cleansing Index

Last Update: Monday, 02 Feb 2009, 02:14 GMT

படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள்

TAMILS KILLED                                                                                   487

படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்கள்

TAMILS CRITICALLY WOUNDED                                                   1895

வன்னியில் படுகொலை

TAMILS KILLED IN VANNI                                                                470

வன்னியில் படுகாயம்

TAMILS CRITICALLY WOUNDED IN VANNI                                  1891

வன்னிக்கு வெளியில் படுகொலை

TAMILS KILLED OUTSIDE OF VANNI                                              17

வன்னிக்கு வெளியில் படுகாயம்

TAMILS CRITICALLY WOUNDED OUTSIDE OF VANNI               4

வன்னிக்கு வெளியில் காணமல் போனோர்

ENFORCED TAMIL DISAPPEARANCES UNDER

AREAS OF SRI LANKAN OCCUPATION / ADMINISTRATION    15

சிறிலங்கா படைகளால் கைதானோர்

TAMILS ARRESTED BY SRI LANKAN L ARMED FORCES         216

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Related Posts...

written by அருட்பெருங்கோ \\ tags:


7 Responses to “இளைஞரின் மரணத்தை வைத்து அரசியல் செய்ய‍‌‍வேண்டாம்!”

  1. 1. Loganathan Says:

    Ungal Tamil Unarvukku Nandri…

  2. 2. Loganathan Says:

    To Read Muthu Kumar’s Last Letter, pls check out: acchamillai.blogspot.com

  3. 3. Sai Ram Says:

    சாட்டை தலைப்பு! sarcastic!

  4. 4. sollarasan Says:

    //தீயாக உள்ள‍ம் கொண்ட அன்னைகளும்,
    சமூக நிதி காத்த‍ அம்மாக்களும்,
    தண்டம் தகரபாலுக்களும்,
    ஞானசூனியசேகரன்களும்,
    உல‌கத் தமிழ் ஈனத்த‍லைவர்களும்,//

    சரியான சவுக்கடி.

  5. 5. Venkatx5 Says:

    /*
    ஆற்றாமையில் புலம்ப மட்டும் தான் முடிகிறது
    */
    என்ன சார் பண்றது.. நம்மால அதுதான் முடியும்..
    தமிழ் நாட்டோட தலைஎழுத்து எப்போ மாறும்ன்னு தெரியலை.

  6. 6. Joe Says:

    // நாம் கட்டிக் காத்து வரும் பண்பாட்டிற்கே விரோதமானது. //

    1964-லிருந்து நம்ம அரசியல்வாதிகள் அப்பாவி தொண்டர்களை தீக்குளிக்க வைத்து அரசியல் பண்ணுவது தானே, நம்ம மரபு? திடீர்னு நீங்க இப்படி சொன்னா அவங்க எப்படி பொழப்ப நடத்த முடியும்? அவங்களே பாவம், நூறு, இருநூறு கோடி ரூபாய் சொத்து சேத்து எளிமையா வாழ்ந்துட்டு இருக்காங்க.

  7. 7. Ram Says:

    good

Leave a Reply