அதெப்படி உன்னால் மட்டும்? கொலுசே…கொலுசே… - 1
Aug 13

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன்னால் தானடி நேர்முகத்தேர்வில்
நான் தோற்றுப் போனேன்!
அவன் உலக அழகி பெயர் கேட்டான்,
நான் உன் பெயரை சொல்லித் தொலைத்தேன்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மௌனத்தோடு மட்டுமேப்
பேசிக்கொண்டிருந்த என்னை
மரத்தோடு கூடப் பேச வைத்தவள் நீ!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புத்தகத்தில்,கடிதத்தில்,
மின்மடலில் தான்
கவிதைகள் வரும்!
இப்படி சுடிதாரில் கூட
வருமா என்ன?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நான் எழுதியனுப்பியக்
கவிதையெல்லாம் அழகு என்றாய்!
அழகி, உன்னைப் பற்றி
எழுதியவை பின் எப்படியிருக்குமாம்?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நிலா, பூமியைச் சுற்றுகிறதா?
அடிப்பாவி, பூமியில் இருக்கும் உன்னைத் தானே
அது ஓயாமல் சுற்றுகிறது!
என்னைப் போல..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பொதுவாய்
இதயத்தின் எடை
300 கிராமாம்.
என்னுடையது
ஒரு 50000 கிராம்
அதிகமாக இருக்கும்!

You may like these too...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

அழியாத அன்புடன், அருட்பெருங்கோ | tags:

24 Responses to “இதயத்தின் எடை 50300 கிராம்!”

  1. சிவாஜி Says:

    so nice………

  2. srivats Says:

    அழகான வரிகள்

    அனுபவித்து எழுதியது என நினைக்கிறேன்

  3. சுதர்சன்.கோபால் Says:

    —புத்தகத்தில்,கடிதத்தில்,
    மின்மடலில் தான்
    கவிதைகள் வரும்!
    இப்படி சுடிதாரில் கூட
    வருமா என்ன?—-

    அழகு…

    அது சரி…ஏதாச்சி காத்து கருப்பு அடிச்சிருச்சோ??

  4. உங்கள் நண்பன் Says:

    அனைத்து கவிதைகளும் அருமை!
    ரசித்தி எழுதி உள்ளீர்கள்!
    நானும் ரசித்துப் படித்தேன்,
    மிகவும் நல்லா இருக்கு நண்பா!

    தொடர்ந்து பதிவிடுங்கள்! வாழ்த்துக்கள்!!!

    அன்புடன்…
    சரவணன்.

  5. அருட்பெருங்கோ Says:

    srivats,

    /அழகான வரிகள்/
    மிக்க நன்றி, அழகான பாராட்டுக்கு..

    /அனுபவித்து எழுதியது என நினைக்கிறேன்/

    அனுபவித்து எழுதியதுதான் , ஆனால் கற்பனையில்!!!

  6. Anonymous Says:

    great …
    so impressive…
    prakash

  7. yal_ahathian Says:

    arul
    uannai -kavijan- akkiyathu -yaaroo-
    awalukku -nanum -nanry- solkeren

    unmaijil- arul -mikavum -nalla -iruku- nanriyudan -yal_ahathian

  8. Naveen Prakash Says:

    //புத்தகத்தில்,கடிதத்தில்,
    மின்மடலில் தான்
    கவிதைகள் வரும்!
    இப்படி சுடிதாரில் கூட
    வருமா என்ன?//

    அழகு மிக அழகு அருள் :))

  9. அருட்பெருங்கோ Says:

    சுதர்சன்,

    /அழகு…/
    நன்றிங்க…

    /அது சரி…ஏதாச்சி காத்து கருப்பு அடிச்சிருச்சோ?? /

    ஹி..ஹி.. ;)))

  10. aaradhana Says:

    நன்றாக ஊள்ளது. ரசித்து எழுதி உள்ளீர்கள்.

  11. அருட்பெருங்கோ Says:

    பிரகாஷ்,

    வாசிச்சதுக்கும், வாழ்த்தினதுக்கும் நன்றிங்க!!!

  12. அருட்பெருங்கோ Says:

    yal ahathian,

    /arul
    uannai -kavijan- akkiyathu -yaaroo-
    awalukku -nanum -nanry- solkeren/

    அப்படின்னா காதலுக்குதான் நன்றி சொல்லனும்!!! ;))

    //unmaijil- arul -mikavum -nalla -iruku- nanriyudan -yal_ahathian //

    நன்றிங்க…

  13. அருட்பெருங்கோ Says:

    நவீன்,

    /அழகு மிக அழகு அருள் :)) /

    உங்களுக்குத் தெரியாத சுடிதார் கவிதையா??? ;))

  14. அருட்பெருங்கோ Says:

    ஆராதனா,

    /நன்றாக ஊள்ளது. ரசித்து எழுதி உள்ளீர்கள். /

    நன்றிகள் ஆராதனா… ரசித்துப் படித்திருப்பீர்கள் என்று நானும் நம்புகிறேன்…

  15. delphine Says:

    truly the best kavithai

  16. மின்னுது மின்னல் Says:

    கவிதை
    அருமையாக உள்ளது
    நன்றி

  17. Anonymous Says:

    beautiful lines..enjoyes a lot

  18. Niranjana Says:

    Very Beautiful…

  19. அருட்பெருங்கோ Says:

    /கவிதை
    அருமையாக உள்ளது
    நன்றி /

    வாங்க மின்னுது மின்னல்….

    உங்கப் பேரும் அருமையாதாங்க இருக்கு…

    வாழ்த்தியதற்கு நன்றி!!!!

  20. அருட்பெருங்கோ Says:

    //beautiful lines..enjoyes a lot //

    அனானி யாராக இருந்தாலும் பாராட்டியதற்கு நன்றிங்க :))

  21. karthik Says:

    superungo.

  22. sindhusubash Says:

    simply superb

  23. Sri Says:

    //உன்னால் தானடி நேர்முகத்தேர்வில்
    நான் தோற்றுப் போனேன்!
    அவன் உலக அழகி பெயர் கேட்டான்,
    நான் உன் பெயரை சொல்லித் தொலைத்தேன்!//

    வீட்ல ஏன் நேர்முகத்தேர்வில் தேர்வாகலனு சொல்லிட்டீங்களா…? ;-)

    //மௌனத்தோடு மட்டுமேப்
    பேசிக்கொண்டிருந்த என்னை
    மரத்தோடு கூடப் பேச வைத்தவள் நீ!//

    அடடா அண்ணா அன்னைக்கு அந்த மரத்துக்கிட்ட பேசிக்கிட்டு நீங்க தானா……?? :-(

    //பொதுவாய்
    இதயத்தின் எடை
    300 கிராமாம்.
    என்னுடையது
    ஒரு 50000 கிராம்
    அதிகமாக இருக்கும்!//

    அச்சச்சோ உடம்ப பார்த்துக்கோங்க அண்ணா……. :-(
    heart romba abnormalla irukku pola………!! :-(

    ;-) கவிதை நல்லா இருந்தது……….!!

  24. அருட்பெருங்கோ Says:

    @நிரஞ்சனா,கார்த்திக்,சிந்து

    மிக்க நன்றி!

    @ஸ்ரீ,

    /உன்னால் தானடி நேர்முகத்தேர்வில்
    நான் தோற்றுப் போனேன்!
    அவன் உலக அழகி பெயர் கேட்டான்,
    நான் உன் பெயரை சொல்லித் தொலைத்தேன்!

    வீட்ல ஏன் நேர்முகத்தேர்வில் தேர்வாகலனு சொல்லிட்டீங்களா?/

    இந்த கவிதை இப்போதான் உங்க கண்ணுல படனுமா?

    /அடடா அண்ணா அன்னைக்கு அந்த மரத்துக்கிட்ட பேசிக்கிட்டு நீங்க தானா??/

    ஆமாங்க.. முன்னமாதிரி நீங்க அதுகிட்ட பேசறதில்லனு வருத்தப்பட்டுச்சு அதான் சமாதானப் படுத்திகிட்டு இருந்தேன்! ;)

    /அச்சச்சோ உடம்ப பார்த்துக்கோங்க அண்ணா.
    heart romba abnormalla irukku pola!! /

    heart abnormallaa இருந்தா heartta dhaana பாத்துக்கனும்? ;)

    /கவிதை நல்லா இருந்தது……….!!/

    இது ஏதோ போனா போகுதுன்னு சொல்ற மாதிரியில்ல இருக்கு?

Leave a Reply