Jul 29
நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!
*
இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.
*
யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
அளவின்றி பேசுகிறேன்.
*
உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்
எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட
சிறகடித்து தவிக்கும் இமைகள்!
*
தனியே நீ முணுமுணுக்கும்
இனிய பாடல்கள்
இசைத்தட்டில் ஒலிக்கையில்
இனிமை இழப்பதேன்?
Related Posts...
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
July 29th, 2008 at 10:37 am
naan dhaan first??
July 29th, 2008 at 10:38 am
me the firstu..???
July 29th, 2008 at 10:38 am
just missu…
Ok… Arul Kavithaikal ellame super…
July 29th, 2008 at 10:40 am
//காதல் கவிதை//
இந்தக் கவிதைகள்ல இதுவும் ஒரு கவிதையா??
July 29th, 2008 at 10:40 am
//தனியே நீ முணுமுணுக்கும்
இனிய பாடல்கள்
இசைத்தட்டில் ஒலிக்கையில்
இனிமை இழப்பதேன்?//
Nalla Irukku….
இசைத்தட்டில்-la Ethuvum Problem Illaiyee…
July 29th, 2008 at 10:43 am
//இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.
*
யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
அளவின்றி பேசுகிறேன்.//
இதெல்லாம் ஒரு சாக்கா??

ம்ம்ம் நல்லாருக்கு..!!
July 29th, 2008 at 10:44 am
//இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்//
அடுத்த தடவை கொடுக்கும் போது வட்டியோட திருப்பி கொடுங்க Boss…
July 29th, 2008 at 10:52 am
\\இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்\\
ஹிம்ம் ஹிம்ம்ம் நடக்கட்டும் :))
\\உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்
எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட
சிறகடித்து தவிக்கும் இமைகள்!
\\
அருமையான வரிகள்
July 29th, 2008 at 11:19 am
/naan dhaan first??
me the firstu..???/
ஏனிந்த கொலைவெறி?
July 29th, 2008 at 11:23 am
/just missu
Ok Arul Kavithaikal ellame super/
நன்றிங்க செந்தில்!
/Nalla Irukku
இசைத்தட்டில்-la Ethuvum Problem Illaiyee/
/அடுத்த தடவை கொடுக்கும் போது வட்டியோட திருப்பி கொடுங்க Boss/
அடுத்த தடவை எழுதும்போதுன்னு சொல்லுங்க!!!
July 29th, 2008 at 11:25 am
//காதல் கவிதை//
இந்தக் கவிதைகள்ல இதுவும் ஒரு கவிதையா??/
இல்ல…அது Search Engine Optimization க்காக
/இதெல்லாம் ஒரு சாக்கா??
ம்ம்ம் நல்லாருக்கு..!! /
நன்றிங்க!
July 29th, 2008 at 11:37 am
/ஹிம்ம் ஹிம்ம்ம் நடக்கட்டும் :))/
எல்லாம் கவிதைல மட்டும் தாங்க!
/அருமையான வரிகள் /
நன்றிகள்!
July 29th, 2008 at 11:47 am
//எல்லாம் கவிதைல மட்டும் தாங்க//
என்ன அண்ணா ரொம்ப கவலைப் படற மாதிரித் தெரியுது. அம்மாக்கிட்ட வேணா சொல்லவா??
July 29th, 2008 at 12:05 pm
//நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!//
ஆகட்டும் அருள்! வாழ்த்துக்கள்… !!
July 29th, 2008 at 12:28 pm
//யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.//
ரொம்ப அழகான வரிகள்..
எல்லா கவிதைகளும் அழக இருக்கு…
July 29th, 2008 at 1:12 pm
/என்ன அண்ணா ரொம்ப கவலைப் படற மாதிரித் தெரியுது. அம்மாக்கிட்ட வேணா சொல்லவா??/
நீங்க சொல்லாமலே அவங்க பொண்ணு பாப்பாங்க… கவலை வேண்டாம்
July 29th, 2008 at 1:13 pm
/ஆகட்டும் அருள்! வாழ்த்துக்கள்!!/
நன்றிங்க ஆல்பர்ட்!
July 29th, 2008 at 4:11 pm
/ரொம்ப அழகான வரிகள்..
எல்லா கவிதைகளும் அழக இருக்கு… /
நன்றிங்க நாணல்!
July 29th, 2008 at 5:24 pm
//இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.//
அதுதான் சரி..
இன்னொன்னும் சேர்த்தே கொடுத்திருக்கலாம்..

July 29th, 2008 at 5:24 pm
//யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
அளவின்றி பேசுகிறேன்.//
நடத்துங்க..

July 29th, 2008 at 5:24 pm
Kavithai nalla irukkungo…
July 29th, 2008 at 5:26 pm
//நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!//
காதலுக்கு கவிதைகள்தான் உடைகளா??
July 29th, 2008 at 7:41 pm
/அதுதான் சரி..
இன்னொன்னும் சேர்த்தே கொடுத்திருக்கலாம்../
வாய்ப்பு கிடைக்கும் காலத்தில் உங்கள் கருத்தையும் கவனத்தில் கொள்கிறேன்
/நடத்துங்க../
கவுஜப் பயணத்த தான சொல்றீங்க? நடத்துவோம்!
/காதலுக்கு கவிதைகள்தான் உடைகளா??/
கவிதைகளும்….
July 29th, 2008 at 9:46 pm
அசத்தலாக இருக்குங்க…
July 30th, 2008 at 9:56 am
/அசத்தலாக இருக்குங்க/
நன்றிங்க விக்னேஷ்வரன்!
July 30th, 2008 at 7:18 pm
//உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்
எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட
சிறகடித்து தவிக்கும் இமைகள்!//
Itha thavira ellaame attakaasam.. ithu attakaasathukku konjam kammi unga rangekku…. :))))
July 31st, 2008 at 3:58 pm
/Itha thavira ellaame attakaasam.. ithu attakaasathukku konjam kammi unga rangekku. :))))/
எல்லாரும் ஒரு ரேஞ்சாதாம்ப்பா இருக்கீங்க!
August 4th, 2008 at 8:34 pm
Hello..
Adutha kadhal kavithai kaga aavaludan edhirpaarthu irukkiren..
– Ungal illadha kadavulin varam vendum innoru bakthan
PS: Ungaloda peyar arutperungo thaana?
August 6th, 2008 at 1:34 pm
சத்தீஷ்,
என்னோட பெயர் அருட்பெருங்கோ தான். அதிலென்ன சந்தேகம்?
August 6th, 2008 at 2:48 pm
Illa…kavithai nayama oru punai peyar vachikiteengala illa appa amma voda thamizharvam than ungaloda kavithai nayathuku karanama nu therinjika than..
infact open panna unga blog page a rendu naala close pannama..almost ella post um padichten…nalla karpanai panreengnaa..
August 7th, 2008 at 9:58 am
சதீஷ்,
எல்லா பதிவும் படிச்சுட்டீங்களா? இதப் படிச்சீங்களா?
- http://blog.arutperungo.com/%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8b_%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d_%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d
August 7th, 2008 at 6:02 pm
Idha padikala than..kavithaigal than padichtu irundhen..oru pechuku ella post um apdinu sonnadha vachi madakka koodathu..
Nalla iruku andha 8 thagaval…ungala pathi innum therinjikka oru 16, 24 ellam ezhudhalame?
btw, singara chennai la illadha velai ya..udane kilambi vaanga..
apram “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, பேர்ல இருந்த சிவமும் பிடிக்கல, ” —- idhula than konjam varutham,
“இல்லாத கடவுளுக்கான படையலாய்” apdingarthukum ippa than artham puriyudhu…naan kadhal a mattum than mean panreenga nu ninachikitu irundhen..
August 7th, 2008 at 7:28 pm
//எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
அளவின்றி பேசுகிறேன்..//
rombe nalla irukku inthe varigal..keep it up..
August 8th, 2008 at 11:27 am
/Idha padikala than..kavithaigal than padichtu irundhen..oru pechuku ella post um apdinu sonnadha vachi madakka koodathu../
/Nalla iruku andha 8 thagaval…ungala pathi innum therinjikka oru 16, 24 ellam ezhudhalame?/
அந்தளவுக்கு சரக்கில்லையே
/btw, singara chennai la illadha velai ya..udane kilambi vaanga../
ம்ம்ம் பார்க்கலாம்ங்க!
/apram “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, பேர்ல இருந்த சிவமும் பிடிக்கல, ” —- idhula than konjam varutham,/
உங்களுக்கா சிவனுக்கா?
/“இல்லாத கடவுளுக்கான படையலாய்” apdingarthukum ippa than artham puriyudhu naan kadhal a mattum than mean panreenga nu ninachikitu irundhen../
சீரியசா எடுத்துக்காதீங்க. ஆளுக்கொரு கருத்து. எல்லாருக்கும் தன்னோட கருத்து மேல நம்பிக்கை. அவ்வளவுதான்!
August 8th, 2008 at 11:28 am
/rombe nalla irukku inthe varigal..keep it up../
நன்றிங்க வளர்மதி!
August 8th, 2008 at 12:04 pm
Serious a sollala…aana eppavo namma manasula padhinja karuthukkala anubhavam kooda kooda appapa reality check panni paakalame…
adhathu namma karuthu kala marupariseelanai seyya oru manasu venum nu solla varen…
sari ithoda indha thread a mudichtu…next meet panren..
August 12th, 2008 at 6:02 pm
Eppadi ….Naan Kavidhai padikum bodhu chattendru padipein.. appadi iruka.. unga kavidhai padikum bodhu mattum thadumaari nindruvitten chella iyalamal
August 12th, 2008 at 11:15 pm
I found your site on technorati and read a few of your other posts. Keep up the good work. I just added your RSS feed to my Google News Reader. Looking forward to reading more from you down the road!
August 21st, 2008 at 11:26 pm
super
August 23rd, 2008 at 12:00 am
anna naan oru kavithai arasan but un kavithai varikal ennai thikaikavaiththuvddathu i love ur kavithai valka nee vallarka un kavi /mendum mendum un kavikkaka kaththirukeran /unnai maddum naan nearelparthal unnaku pon makudam sudduvan take care
August 23rd, 2008 at 1:08 am
// தனியே நீ முணுமுணுக்கும்
இனிய பாடல்கள்
இசைத்தட்டில் ஒலிக்கையில்
இனிமை இழப்பதேன்? //
Very nice….
September 19th, 2008 at 2:26 pm
தனியே நீ முணுமுணுக்கும்
இனிய பாடல்கள்
இசைத்தட்டில் ஒலிக்கையில்
இனிமை இழப்பதேன்?
ithu kadalin uuicham
September 28th, 2008 at 8:44 pm
இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்………..nice lines….i really love them…
September 29th, 2008 at 1:59 pm
super
October 4th, 2008 at 4:49 pm
/Serious a sollala…aana eppavo namma manasula padhinja karuthukkala anubhavam kooda kooda appapa reality check panni paakalame…
adhathu namma karuthu kala marupariseelanai seyya oru manasu venum nu solla varen…
sari ithoda indha thread a mudichtu…next meet panren../
கருத்துக்கு நன்றி சதீஷ்
October 4th, 2008 at 4:50 pm
/Eppadi ….Naan Kavidhai padikum bodhu chattendru padipein.. appadi iruka.. unga kavidhai padikum bodhu mattum thadumaari nindruvitten chella iyalamal/
கவிதை புரியலன்னு சொல்ல வர்றீங்களா?
October 4th, 2008 at 4:51 pm
/I found your site on technorati and read a few of your other posts. Keep up the good work. I just added your RSS feed to my Google News Reader. Looking forward to reading more from you down the road!/
வாழ்த்துக்கு நன்றிங்க அலெக்ஸ்!
October 4th, 2008 at 4:53 pm
நன்றிங்க ராஜா.
*
/anna naan oru kavithai arasan but un kavithai varikal ennai thikaikavaiththuvddathu i love ur kavithai valka nee vallarka un kavi /mendum mendum un kavikkaka kaththirukeran /unnai maddum naan nearelparthal unnaku pon makudam sudduvan take care/
ஏங்க இந்த கொலவெறி? :(:(
October 4th, 2008 at 4:55 pm
விஷ்ணு, மோகன் ராஜ், யுவா, மங்கை, அனைவருக்கும் நன்றிகள்!
October 14th, 2008 at 6:03 pm
தங்களுடைய “ஒரு காதல் பயணம்” நூல் படித்தேன். அருமை. ஒவ்வொரு பகுதியிலும் நீல வண்ணத்தில் நான்கு வரிகள் மிக அருமை. கதைத்தலைவன் பெயரைச் சிவா எனக் கடைசியில் குறிப்பால் உணர்த்தியிருக்கிறீர்கள். தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி.
வேண்டுகோள்: அருள்கூர்ந்து ஆங்கிலக்கலப்பைத் தவிருங்களேன்..
October 29th, 2008 at 1:41 pm
HI arul yra poetrys all are nice and cute…. keep writing well.. all the best.. then i want yrs details with cell no… thanks…
by ….
dhanabal
November 7th, 2008 at 11:50 am
VERY NICE
December 9th, 2008 at 9:56 am
Kavithaikal Arumai
irunthum oru kavalai
ithupol ennal mudiyavillaiyendru