கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன வரவேற்பறை மீன்தொட்டி
Jun 03

காலையில் படியிறங்கும்பொழுது
கீழ்வீட்டுக் குழந்தை முறைத்துப்பார்த்தபடி நின்றது.
அதனை சிரிக்க வைக்க
கையாட்டி சிரித்தபடி நான் கீழிறங்க,
சலனமில்லாமல் பார்த்துக்கொண்டு
என் தலை மறையும் நேரம்
கையாட்டத் துவங்கியது.
திரும்பி நான் எட்டிப்பார்க்க,
‘ஏமாந்தியா?’ என்பதாய் தலையாட்டி
கோணல் வாய்வைத்து சிரித்தது.
கையாட்டலைவிட தலையாட்டல் அழகாய் இருந்தது.

Related Posts...

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

written by அருட்பெருங்கோ \\ tags: ,


26 Responses to “ஏமாந்தியா?”

  1. 1. Maragathavalli Says:

    kaalaiyilae nalla vaangi katti irukkenga pola…

  2. 2. நாடோடி இலக்கியன் Says:

    குழந்தைக்கு ஒரு 18 ,20 வயசு இருக்குமா?
    :)

  3. 3. Senthil Kumar Says:

    //குழந்தைக்கு ஒரு 18 ,20 வயசு இருக்குமா?//

    Repeatttuuuuuu…

  4. 4. Senthil Kumar Says:

    //கையாட்டலைவிட தலையாட்டல் அழகாய் இருந்தது.//

    Ungal Kaiyaadal Nalla Irukku…

  5. 5. முத்துலெட்சுமி Says:

    \\நாடோடி இலக்கியன் Says:

    June 3rd, 2008 at 10:08 am
    குழந்தைக்கு ஒரு 18 ,20 வயசு இருக்குமா?//

    :))

  6. 6. ஸ்ரீ Says:

    மாப்பி உன்னை பத்தி இந்த இலக்கியனுக்கு தெரிஞ்சி போச்சுப்பா ஓடிப்போய் ஒளிஞ்சிக்க :)

  7. 7. அருட்பெருங்கோ Says:

    மரகதவல்லி, இதெல்லாம் எங்களுக்கு பொழுதுபோக்கு ;)

  8. 8. அருட்பெருங்கோ Says:

    / குழந்தைக்கு ஒரு 18 ,20 வயசு இருக்குமா?/

    சரியா சொன்னீங்க இலக்கியன். பொண்ணுக்கு வயசு 18, 20 தான் இருக்கும். வயசு வருசத்துல இல்ல மாசத்துல ;)

  9. 9. அருட்பெருங்கோ Says:

    /குழந்தைக்கு ஒரு 18 ,20 வயசு இருக்குமா?//
    :)) /
    அக்கா, யூ டூ???

  10. 10. அருட்பெருங்கோ Says:

    /மாப்பி உன்னை பத்தி இந்த இலக்கியனுக்கு தெரிஞ்சி போச்சுப்பா ஓடிப்போய் ஒளிஞ்சிக்க/

    நான் ஒளிஞ்சிக்கறேன். நீ என்னைய கண்டுபிடிக்கனும் சரியா? நாம ஒளிஞ்சு ஒளிஞ்சு வெளையாடலாம்….கிர்ர்ர்ர்ர் என்னாதிது சின்னப்புள்ளத்தனமா?

  11. 11. அருட்பெருங்கோ Says:

    செந்தில் குமார், நீங்க எப்போ நடுவுல வந்தீங்க? வாழ்த்துக்கு நன்றி. ரிப்பீட்டுக்கு கிர்ர்ர்ர்ர்

  12. 12. Sri Says:

    Anna antha kozhanthaikku 21 vayasunnu neenga yaarukkume sollaliya..?!? ;-)

  13. 13. அருட்பெருங்கோ Says:

    வாம்மா மின்னல். எங்க இன்னும் வரலையேன்னு பார்த்தேன் :)
    அண்ணன கலாய்க்கிறதுல இந்த தங்கச்சிங்களுக்கு அப்படி என்னதான் சந்தோசமோ!

  14. 14. Sri Says:

    Anna naan Minnal illa…!! :-(
    Sri…….!!
    Paartheengala ippove peramaranthutteenga……!! :-(

  15. 15. அருட்பெருங்கோ Says:

    பதிவு போட்டதும் மின்னல் மாதிரி வந்துடுவீங்களேன்னு சொன்னேன். அழாதீங்க!!!

  16. 16. Sri Says:

    oh ok…!!
    Naankooda antha kozhanthaiya paarthathula ungalukku ellam maranthu pOchunu kavalai pattutten…..!! ;-)

  17. 17. Alb Says:

    குழந்தை காலைலயே வாங்குனுச்சுனா
    நம்ம அன்பர்கள் அருள நாள் முழுக்க வாங்குறாங்க… !!!

    என்ஜாய் சகோதரா!!!

  18. 18. நாடோடி இலக்கியன் Says:

    //குழந்தை காலைலயே வாங்குனுச்சுனா
    நம்ம அன்பர்கள் அருள நாள் முழுக்க வாங்குறாங்க… !!!//

    அப்படியா அருள்..!
    :)

  19. 19. அருட்பெருங்கோ Says:

    @Sri,

    இனிமே நான் எந்த குழந்தையையுமே பார்க்கல. ஓக்கேவா? :)

  20. 20. அருட்பெருங்கோ Says:

    /குழந்தை காலைலயே வாங்குனுச்சுனா
    நம்ம அன்பர்கள் அருள நாள் முழுக்க வாங்குறாங்க !!!

    என்ஜாய் சகோதரா!!!/

    முதல் வரிய படிச்சதும் ஏதோ பரிதாபப்படுறீங்களேனு நெனச்சேன்.

    அடுத்த வரியில கும்மிட்டீங்களே ஆல்பர்ட். நல்லாருங்க :)

  21. 21. அருட்பெருங்கோ Says:

    /அப்படியா அருள்..!/

    இலக்கியரே. வாங்கறதுன்னா கும்மறது. இப்போ நீங்க கும்முற மாதிரி ;)

  22. 22. சாய் ராம் Says:

    சில சம்பவங்கள் திரும்ப திரும்ப மெல்லிய இசையோடு ஸ்லோ மோஷனில் பிளே ஆகி நினைவலைகளை வருடி செல்லும். யோசித்து பார்த்தால் அதில் குறிப்பிடதகுந்ததாய் ஒன்றும் இருக்காது. ஆனால் எதோ உணர்வினை அது மீட்டுகிறது என்பது உண்மை.

  23. 23. அருட்பெருங்கோ Says:

    உண்மைதான் சாய்ராம்.
    அந்த குழந்தையிடம் நான் எதிர்பார்த்தது ஒன்று. என்னை ஏமாற்றுவதாக நினைத்து அது செய்ததோ வேறொன்று. ஆனால் நான் எதிர்பார்த்ததைவிட அது செய்தது அழாகாய் இருந்தது.

  24. 24. மங்களுர் சிவா Says:

    //குழந்தைக்கு ஒரு 18 ,20 வயசு இருக்குமா?//

    Repeatttuuuuuu…

  25. 25. அருட்பெருங்கோ Says:

    ///குழந்தைக்கு ஒரு 18 ,20 வயசு இருக்குமா?//

    Repeatttuuuuuu…/

    எங்க இருந்தாலும் தேடிப்பிடிச்சி கும்மறதுன்னா வந்துட்ற மாப்ள! நல்லாரு! :)

  26. 26. Venkatesh Says:

    இந்த கவிதைய ஒரு நாள் அந்த பாப்பா படிச்சிட்டு அருள்-எ கும்ம போகுது..

Leave a Reply